ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க நாளை (30) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் பேசப்பட்டதாக கூறப்படும் பேச்சு தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.