Date:

“அவனை கொன்று விட்டேன். அவனால் இனி வர முடியாது” நடந்தது என்ன?

குளியாபிட்டிய பிரதேசத்தில் காதலியின் வீட்டுக்குச் சென்ற 36 வயதான சுசித ஜயவன்ச என்ற இளைஞன் காணாமல் போயுள்ளார்.

இந்த இளைஞன் குறித்த பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் நிலையில், இவர் கடந்த ஆறு நாட்களாக காணாமல் போயுள்ளார்.

இவர் கடந்த 22ஆம் திகதி குளியாப்பிட்டி வஸ்ஸாவுல்ல பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு தனது கடையின் ஊழியர் ஒருவருடன் சென்றுள்ளார்.

அவர் குறித்த வீட்டிற்குச் சென்ற நேரம் முதல் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், குறித்த இளைஞன் சென்றதாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரான சிங்கிதி என்ற நபரால், சுசிதவின் நண்பருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இது தொடர்பில் சுசிதவின் நண்பர் கூறும் போது,

“செவ்வாய்க்கிழமை இரவு 7:58 மணிக்கு சிங்கிதி என்ற நபர் எனக்கு போன் செய்தார். அப்பாவாக என் மகளுக்கு நியாயம் செய்தேன். இப்போது அதை பேசி பலனில்லை. அவனை நான் கொன்று விட்டேன். அவனால் இனி வர முடியாது” என்றார்.

சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் வாகனமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகினர்

காசா நாசர் மருத்துவமனை மீது இன்று (25) திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில்...

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல்...

ரணிலை பார்வையிடவில்லை“ பிரதமர் விளக்கம்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னாள்...

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில்...