உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களுக்கு கையளிக்க ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தான் விஜயத்தின் பின்னர் நாளை (24) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
உமா ஓயா திட்டமானது 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய கட்டத்திற்கு சேர்க்கின்றதோடு, குறித்த திட்டத்திற்காக 529 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு நாள் விஜயமாக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வெளிவிவகார அமைச்சு தயாராக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.