Date:

ஈஸ்டர் தாக்குதல் நடந்து இன்றுடன் 5 வருடங்கள்

ஈஸ்டர் ஞாயிறு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது.

அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர் நேற்று (20) பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட தெய்வீக பூஜையுடன் ஆரம்பமானது.

அதன்படி நேற்று நள்ளிரவு முழுவதும் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை ஊர்வலம் இடம்பெற்றது.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019 அன்று, நாட்டின் 08 இடங்களில் தீவிரவாதிகள் குழு 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியது, அங்கு 273 பேர் உயிரிழந்தனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான கடுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தை மையப்படுத்தி தொடர் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட தெய்வீக ஆராதனை, பேராயர் உதவி ஆயர் மேதகு அன்டன் ரஞ்சித் தலைமையில் இடம்பெற்றதுடன், தீவிரவாத தாக்குதலில் தமது உறவுகளை இழந்த உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தேவாலயங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...

“ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்....

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...