Date:

நுவரெலியாவில் வண்ணமயமான மலர் கண்காட்சி

செ.திவாகரன் டி.சந்ரு

நுவரெலியாவில் வண்ணமயமான மலர் கண்காட்சி ஆரம்பம்.

எழில் கொஞ்சும் நுவரெலியா நகரில் வசந்த காலத்தையொட்டி வருடம் தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி நுவரெலியா மாநாகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி இன்று (20) சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

ஏப்ரல் மாத வசந்த காலத்தில் ஒரு கட்டமாக வருடம் தோறும் குறித்த மலர் கண்காட்சி நடைபெறும் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இம்மலர் கண்காட்சியில் விதவிதமான மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட உருவ பொம்மைகள், மிருகங்களின் உருவம் காய்கறிளின் உருவம் என பல வடிவங்களில் உருவ அலங்காரங்களும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .
குறித்த மலர் கண்காட்சியில் அதிகமான அரச மற்றும் தனியார் பிரிவுகளிலிருந்து பல போட்டியாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர். இம்மலர் கண்காட்சிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (21) மாலை பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது.

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மலர் கண்காட்சியில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க மற்றும் கண்டி இந்திய உயர் ஸ்தானிகர் வைத்தியர் எஸ். அதிரா மற்றும் நுவரெலியா மாநகரசபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான, முன்னாள் மாநகரசபை முதல்வர்கள் , நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் மாநகரபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

எனவே நுவரெலியா வரும் சுற்றுலாப் பயணிகள், அழகை ரசிப்பதோடு இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என மாநகரநபையினர் கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட...

Breaking கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும்...

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...