பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும், அமைச்சர் காமினி லொகுகேவும் ஒன்றினைந்து என்னை தாக்குகிறார்கள். இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஆகவே உயிரை பாதுகாத்துக் கொள்ள பாதுக்க பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
பொலிஸ் சேவையை அரசியலாக்கும் கீழ்த்தரமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டாம். என அமைச்சர் சரத் வீரசேகரவிடம் பல முறை எடுத்துரைத்தும் அவர் பொருட்படுத்தவில்லை. அரசாங்கத்தில் உள்ள ஒரு சில அமைச்சர்களின் செயற்பாடு வெறுக்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.