Date:

சியபத பினான்ஸின் புதிய கிளை அக்கரைபற்றில்

சியபத பினான்ஸ் பிஎல்சி தனது மற்றுமொரு கிளையை அக்கரைபற்றில் திறந்து வைத்ததன் மூலம் அதன் வலையமைப்பை மேலும் விரிவுபடுத்துகிறது

 

சம்பத் வங்கி பிஎல்சியின் முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, அண்மையில் அக்கரைப்பற்றில் தனது புதிய கிளையை திறந்து வைத்தது. சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன, அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர்

திரு. வி. ஜெகதீசன், அக்கரைப்பற்று இராணுவ முகாம் சிவில் அலுவல்கள் இணைப்பதிகாரி மேஜர் ஜனக சுபசிங்க, சியபத பினான்ஸ் பிஎல்சி நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அக்கரைப்பற்று பொலிஸ் காரியாலய அதிகாரிகள் மற்றும் விசேட அதிதிகள் ஆகியோர் முன்னிலையில் தேசத்திற்கு இணையற்ற நிதி தீர்வுகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்காக தனது புதிய கிளையை, இல. 130, சாகம வீதி, அக்கரைப்பற்று எனும் இடத்தில் திறந்து வைத்தது.

 

அதன் மூலோபாய நோக்கமாக பிராந்தியத்தில் உள்ள சிறு வணிகங்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களுக்கு சேவை வழங்குவதில் கவனம் செலுத்தும் சியபத பினான்ஸின் அக்கரைப்பற்று கிளையானது அதன் விரிவான கிளை வலையமைப்பில் 48 வது கிளையாக  உள்ளது. இந்தக் கிளையானது, இலங்கையர்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதிலும், நாட்டின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கான  அதன் சேவை வரம்பை விரிவுபடுத்தும் நிறுவன முயற்சிகளின் ஒரு பகுதியாகும். குத்தகை, நிலையான வைப்பு, சேமிப்பு கணக்குகள், தங்க கடன் சேவை, வணிக மற்றும் தனிப்பட்ட கடன்கள், விரைவான வரைவு(fast draft ), வாடகைக் கொள்முதல், காரணியாக்கம்(Factoring) மற்றும் பில் கொடுப்பனவுகள்(Bill Payments) செலுத்தும் வசதி உட்பட பல்வேறு சேவைகள் உள்ளடங்களாக அக்கரைப்பற்றுக் கிளையின் தயாரிப்புப் பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், சியபத பினான்ஸ் பிஎல்சி, தேசத்தை வலுவூட்டும் அதன் உறுதிப்பாட்டில் நிலையாக உள்ளது” என சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன அவர்கள் கூறினார். மேலும் அவர் கூறுகையில் உள்ளூர் சமூகங்களின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான உந்து சக்தியாக நிதி தீர்வுகள் அமையும் ஓர் எதிர்காலத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியை அக்கரைப்பற்று கிளை குறிக்கிறது. விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் மற்றும் வணிகத் துறைகளை வலுப்படுத்துவதில் மூலோபாய கவனம் செலுத்துவதன் மூலம், இந்த முயற்சியானது அக்கரைப்பற்று சமூகம் வைத்திருக்கும் பரந்த ஆற்றலை வெளிக்கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாங்கள் எங்கள் நிதி நிபுணத்துவத்தை விரிவுபடுத்தி,  நாங்கள் சேவை ஆற்றும் சமூகத்திற்கு பொருளாதார வலுவூட்டல் மற்றும் செழிப்பை வளர்பதில் 2024 ஆம் ஆண்டை இன்னும் நம்பிக்கைக்குரிய ஆண்டாக நாங்கள் கருதுகின்றோம்” என அவர் விரிவாகக் கூறினார்.

 

அக்கரைப்பற்று கிளை திறப்போடு, சியபத பினான்ஸ் பிஎல்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், அதன் மகத்தான பசுமைத் திட்டமான “சியபதென் மிஹிகாதட” நாடு முழுவதும் 10 000 மரங்களை நடும் முயற்சியை ஆரம்பித்தது. இந்த முயற்சியானது, அப்பகுதியைச் சுற்றி 100 மரங்களை நடுவதில் அதன் முதற்கட்டமாக முஆஃவுமுஃ கொலவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் நடப்பட்டது. சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதிலும் உள்ள கிளை வலையமைப்பைக் கொண்ட முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகும், இது தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கல் சிறந்த தரத்துடன் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தனது நிதிச் சேவைகளை வடிவமைத்துள்ளது. பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலான ஒரு வளமான வரலாற்றைக் கொண்டு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், நாடு முழுவதிலும் உள்ள தனிப்பட்ட நபர்களின் நிதித் தேவையினை பூர்த்தி செய்வதிலும் நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளது. சியபத பினான்ஸ் பிஎல்சி நிறுவனம் தனது நிதிச் சேவைகளின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான இடைவிடாத அர்ப்பணிப்பு, வணிக அபிலாஷைகளைப் பின்தொடர்வதில் சமூகங்களை எளிதாக்குவதற்கான உண்மையான விருப்பத்தில் வேரூன்றியுள்ளது. நிலையான வைப்பு, சேமிப்புக் கணக்குகள், குத்தகை, வாடகை கொள்முதல், தங்க கடன்சேவை, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், சுழலும் கடன்கள், பில் கட்டணங்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதி சேவைகள் உள்ளடக்கிய பல்வேறு மற்றும் விரிவான தயாரிப்பு வரிசையை நிறுவனம் வழங்குகிறது.

சியபத பினான்ஸ் பிஎல்சி பற்றிய மேலதிக தகவல்களுக்கு, 0677 605 655 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும் அல்லது www.siyapatha.lk என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373