நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான வானிலை காரணமாக குடிநீர் பிரச்சினை காணப்படுமாயின், அது தொடர்பில் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்படி, 117 என்ற இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், குடிநீர் பிரச்சினை காணப்படுமாயின், தமது பிரதேச கிராம சேவை அதிகாரிக்கு அறிவிக்குமாறு நிலையம் தெரிவித்துள்ளது.