Date:

மரதன் ஓடிய மாணவன் மரணம்; அதிரடி நடவடிக்கையில் கல்வி அமைச்சு

நேற்று (11) திருக்கோவில் பாடசாலை ஒன்றில் பாடசாலை மரதன் ஓட்டப் போட்டியின் போது 16 வயதுடைய மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.

மாணவனின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனை அம்பாறை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், வெப்பமான வானிலை காரணமாக வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு கல்வி அமைச்சு அண்மையில் அனைத்து பாடசாலை அதிகாரிகளுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை முதல் மாட்டிறைச்சிக்கு புதிய நிர்ணய விலை

மன்னார் மாவட்டத்தில் நாளை (10) முதல் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...