இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இசை நிகழ்ச்சியொன்றை பார்வையிட்டு வீடு திரும்பியவர்கள் மீது கெப் ரக வாகனமொன்று மோதியுள்ளதுடன், விபத்தின் பின்னர் கெப் ரக வாகனத்துடன் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
விபத்தில் ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 15, 19 மற்றும் 21 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.