மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்பு அமைந்துள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் இன்று (07) பகல் 12 மணியளவில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் நிலையத்துக்கு முன்பு அமைந்துள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் சம்பவ தினமான இன்று காணியை துப்பரவு செய்து அதன் குப்பைகளை தீயிட்டு எரித்துக் கொண்டிருந்த போது அதில் இருந்த கைக்குண்டு ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடப்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.