Date:

அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுத்தினம் அனுஸ்டிப்பு

இ.தொ.காவின் மறைந்த தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுத்தினம் இன்று கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இ.தொ.கவின் பொதுச் செயலளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக சி.எல்.எப் காரியாலயத்தில் உள்ள அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது அமரர். ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக பிராஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு “பிரஜா விருட்சம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.
முதற் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட இ.தொ.காவின் இளைஞர் அணியின் தலைவர் ராஜமணி பிரசாத், செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் மற்றும் சில முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த வருடத்திற்குள் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் மலையகத்தின் பல பகுதிகளிலும் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...