ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் அமைந்துள்ள கடை ஒன்றில் இன்று (24) பிற்பகல் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விழாக்களுக்கான பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை அணைக்க கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
இதுவரையில் விபத்துக்கான காரணம் தெரிவிக்கவில்லை.