மன்னார் தாராபுரம் அல் மினா பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற பெற்றோர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.

அல் மினா பாடசாலையின் புதிய அதிபர் மற்றும் பழைய மாணவர்கள் சங்கம், பாடசாலை அதிபர் சங்கம், மற்றும் ஆசிரியர்களின் முயற்சியினால் பெற்றோர்களுக்கான எமது எதிர்கால மாணவர்கள் எனும் தலைப்பில் வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை (10) தாராபுரம் அல் மினா பாடசாலையில் பெரும் வரவேற்புடன் இனிதே இடம்பெற்றது.

இதில் அமேசன் உயர் கல்வி AMAZON COLLEGE & AMAZON CAMPUS நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பேராதணை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், கல்வி மற்றும் உளவளத்துறை ஆலோசகரும், சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற இல்ஹாம் மரைக்கார் அவர்கள் வளவாளராகக் கலந்து இனிதே நடந்துமுடிந்தன.


