2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள் பரிசீலனை விண்ணப்பங்களை இன்று(13) முதல் Online ஊடாக சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஆறாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளை இன்று(13) முதல் பெப்ரவரி 29 ஆம் திகதி வரை Online ஊடாக சமர்ப்பிக்க முடியுமென அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு பிரவேசித்து அதிகபட்சமாக 3 பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
