Date:

72 சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பு !

No description available.

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 6 மணிமுதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

இந்தநிலையில், கடந்த 6 ஆம் திகதி நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் குறித்த சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நடத்திய முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கவில்லை.

அதன்படி, நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இந்தநிலையில், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இன்று காலை 6 மணி முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் இணைப்பாளர் சானக்க தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

 

NewsTamil Ad
NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு...

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை – அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை - அபூர்வ ஆளுமை கொண்ட...

4,000 போலி யுவான் நாணயத்தாள்கள் மீட்பு

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் போலி நாணயத்தாள்கள் மற்றும் போலி இரத்தினக் கற்கள்...

வர்த்தக கவுன்ஸிலின் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் நேற்று காலை நடைபெற்ற இலங்கை வர்த்தக கவுன்ஸிலின்...