Date:

எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் நாட்டை திறக்க நடவடிக்கை

எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் நாட்டை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாடோபுள்ளே இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நோய் பரவுவதை கட்டுப்படுத்த நான்கு வார முடக்கல் போதுமானது. அத்துடன் இந்த காலகட்டத்தில் கோவிட் இறப்புக்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளன.

அடுத்த திங்கட்கிழமைக்குப் பின்னர் நாடு முடக்கப்படும் என நான் நினைக்கவில்லை. நாடு படிப்படியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும்.

கோவிட்டுடன் ஒரு புதிய வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும். அதே நேரத்தில் சுகாதார நடைமுறைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற அவசர எச்சரிக்கை; ரியாத்திலுள்ள தூதரகத்தின் மீதும் தாக்குதல்

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு...

Breaking போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்

ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில்...

லெபனான் எல்லைக்குள் புதிய முற்றுகை!

இஸ்ரேலிய எல்லைக் கிராமங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், லெபனானில் மேலதிக...

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்து அரசின் நிலைப்பாட்டை கூறிய ஜனாதிபதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய...