Date:

கவனம் செலுத்தாவிடின் சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை பணிபகிஷ்கரிப்பு

சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க இன்று(31) மாத்திரமே அதிகாரிகளுக்கு அவகாசம் இருப்பதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் தலையீடு செய்யாவிட்டால் நாளையதினம் (01) காலை 6.30 முதல் 72 தொழிற்சங்கங்களை சேர்ந்த சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார ஊழியர்கள் சங்கங்கள் இதற்கு முன்னரும் எதிர்ப்பில் ஈடுபட்ட போதிலும் அரசாங்கத்தினால் அதற்கான பதில் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இது சுகாதாரத் துறையில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் ​தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...