ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட பெலியத்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வாகனம், காலி வித்யாலோக பிரிவேனாவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் நேற்று முன்தினம், டிஃபென்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
காலை 8:30 மணி முதல் 8:40 மணி வரை நடந்த துப்பாக்கிச் சூட்டில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
டிஃபென்டருக்குள் இருந்த மற்றைய நபர் படுகாயங்களுடன் தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவர்களில் ‘அபே ஜன பல ’ கட்சியின் (எங்கள் மக்கள் கட்சி ) தலைவர் சமன் பெரேராவும் அடங்குவார்.