யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் செவ்வாய்க்கிழமை (23) காலை இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ். நகரை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸூம், தனியார் பஸ்ஸூம் மோதியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் 8 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.