கத்தாரில் வாழும் இலங்கை பெற்றோர்களுக்கான விசேட உளவியல் கருத்தரங்கொன்றை வளவாளராக சர்வதேச பயிற்றுவிப்பாளர், உளவியல் ஆலோசகர் மற்றும் இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் இல்ஹாம் மரிக்காரினால் கத்தாரில் நடத்தப்பட்டது.
இதிலே கட்டாரில் உள்ள நூற்றுக்கு மேற்பட்டடோர் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.
இந்த கருத்தரங்கில் தற்காலத்தில் பிள்ளைகள் தண்டிக்கப்படுவது பாரிய தவறாகும், பெற்றோர்ளோ ஆசிரியர்களோ பிள்ளைகளை தண்டிப்பதை நிறுத்தப்படவேண்டும், பெற்றோரை மேம்படுத்துதல் மற்றும் குழந்தை பருவ கோளாறுகளை நிவர்த்தி செய்வதற்கான பல அம்சங்கள் பேசப்பட்டது.
இஹ்ஜாஸ் பாயிஸ் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வு கத்தாரில் உள்ள இலங்கை பாடசாலையில் நடைப்பெற்றதோடு, ஆரோக்கியமான குடும்பவாழ்வு சமூக மாற்றத்திற்கு மிக முக்கியமானது என்பதால் இக்கருத்தரங்கு வெற்றியாக அமைந்தது.
குறித்த கருத்தரங்ககை இலங்கை சமூக நல சம்மேளனம் மற்றும் தூய தேசத்திற்கான இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.