கட்டணம் செலுத்தத் தவறிய பத்து லட்சம் வீடுகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட மின் பாவனையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கை மின்சார சபையின் சேவையை பெற்றுக்கொண்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தமாக பத்து லட்சத்து அறுபத்து நான்காயிரம் வீடுகளது மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (10) நாடாளுமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பில் சஜித் பிரமதாச எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே இந்த விடயம் வௌியாகியுள்ளது.