Date:

காசா மக்களுக்கு தற்காலிக விசா

ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவைத் தொடர்ந்து தெற்கு காசாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா ஏறக்குறைய முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் பலத்த சண்டை நடைபெற்று வருகிறது.

இதனால் பலஸ்தீன மக்கள் கடும் சோதனையை சந்தித்து வருகின்றனர். தங்குவதற்கு இடமில்லாமல், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.

இந் நிலையில் “கனடா நாட்டினரின் உறவினர்கள் காசா பகுதியில் இருந்து, எங்கள் நாட்டில் குடியேற தற்காலிக விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்” என கனடா தெரிவித்துள்ளது. ஆனால், “இஸ்ரேல் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காசாவில் இருந்து வெளியேற நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் ஜனவரி 9-ந் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் குடிவரவு மந்திரி மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 660 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், நிரந்தமாக வசித்து வருபவர்கள், அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகளை காசாவில் இருந்து அழைத்து வர அரசு கவனம் செலுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுடைய பெற்றோர்கள், குழந்தைகள், பேரக்குழந்கைள் போன்றோரின் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்புடையதாக இருந்தால் மூன்று வருடங்கள் விசா வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...

கடமைகளை பொறுப்பேற்ற அரச புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

அரச புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த...

Justin பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும்!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும்...