Date:

பிரதமர் – புனித பாப்பரசர் சந்திப்பு இல்லை

இத்தாலிக்கு அடுத்த வாரம் விஜயமொன்றை மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ,அங்கு வத்திக்கானில் புனித பாப்பரசரை சந்திக்கமாட்டாரென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக ,பிரதமர் மஹிந்த அங்கு பாப்பரசரை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தபின்னர் , கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட்டோர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர். உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடக்காமல் சர்வதேசத்திற்கு அரசு தவறான விடயங்களை கூறலாமென பேராயர் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியிலேயே பாப்பரசர் – மஹிந்த சந்திப்பு இடம்பெறாதென அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு பேராயர் இல்லத்திலிருந்து வத்திக்கானுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டிருக்கக் கூடுமென்று மற்றுமொரு தகவல் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பத்தரமுல்லையில் ஓர் உல்லாசத் தீவு

பத்தரமுல்ல பகுதியில் ஒரு பெரிய பொது ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வலயத்தை...

இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் தீர்க்கமான ஒருநாள்...

ஹிஸ்புல்லாஹ்வின் 6 வழக்குகளும் தள்ளுபடி

ரீ.எல்.ஜவ்பர்கான் நிகழ்நிலை காப்புப் சட்டத்தின்கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ்...