Date:

குற்றத்தை நிரூபித்தால் பதவி விலக தயார் – மஹிந்த அமரவீர

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் தாம் பதவி விலக தயாராக இருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவில் உள்ள ஒரு தீவினை நிரப்புவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அண்மைய காலங்களில் இதற்காக சுமார் ஆறரை கியூப் மணல் இலங்கையில் இருந்து மாலைத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதற்காக இலங்கையில் உள்ள நிறுவனம் ஒன்றினால் வரிப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் நாடாளுமன்றில் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சாணக்கியன் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அமைச்சர் பதவியை மாத்திரமல்லாது,  நாடாளுமன்ற உறுப்புரிமையையும் துறக்க தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...