193 நாடுகளை அங்கத்துவமாக கொண்டுள்ள ஐ.நா. பொதுச்சபையில், காசாவில் உடனடி போர் நிறுத்தம்கோரும் தீர்மானம் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்துக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா உட்பட 153 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10 நாடுகள் எதிராக வாக்களித்தன. உக்ரைன், ஜேர்மன் உட்பட 23 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்ல.
இஸ்ரேலின் ஆக்ரோஷமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. காசா மீதான இஸ்ரேல் போரில் அங்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 70 சதவீத்துக்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆவர்.