Date:

கணிப்பில் மாற்றம் – மின் கட்டணத்திலும் மாற்றம்?

கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நீர்மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டுகளில், இந்த காலப்பகுதியில் இதுபோன்ற மழை எமக்கு கிடைக்கவில்லை, ஆனால் இப்போது ஒவ்வொரு நாளும் மழையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் அதிகளவில் நீர் மின்சாரத்தை பயன்படுத்தக்கூடுய வாய்ப்பு கிடைத்துள்ளது.தற்போதுள்ள நிலக்கரி ஆலைகள் அல்லது டீசல் ஆலைகளை நிறுத்தி வைக்க முடிந்திருப்பது எங்களுக்கு ஒரு நன்மையாகும்.அடுத்த திருத்தம் ஏப்ரல் மாதம்தான் முன்மொழியப்பட்டிருந்தது. ஆனால்  அரசாங்கம் முடிவொன்றை எடுத்துள்ளது, இந்த கணிப்புகள் மாறிவிட்டதால், இதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். அதன்படி, டிசம்பர் 31 ஆம் திகதி எங்களின் இருப்புநிலை அறிக்கை முடிந்த பிறகு, ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும்  கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்.தற்போதைய நிலைமைக்கு அமைய கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. எனினும் நான் அவசரப்பட மாட்டேன். இது தொடர்பான தரவு மற்றும் அந்தத் தகவல்களை மின்சார சபையும் அதிகாரிகளுமே வழங்க வேண்டும்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து...

தேசபந்து நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு...

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று!

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இடம்பெறவுள்ளது.   ஏப்ரல்...

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373