Date:

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: திடீரென வீதிக்கு நடுவே வந்த நபரால் அமைதியின்மை

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தபால் ஊழியர் சங்கத்தின் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில், நாடாளுமன்றத்திற்கு முன்பாக தற்போது இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸார் கலகத் தடுப்பு பொலிஸார் உள்ளிட்டோர் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மற்றும் கண்டி பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு தீர்வுகோரல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளபட்டுள்ளது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென வீதிக்கு குறுக்கே சென்று அமர்ந்து கோஷம் எழுப்பியதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, எதிர்வரும் 10ஆம் திகதி மாலை 4 மணி தொடக்கம் தொடர்ந்து 48 மணிநேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேருந்து கவிழ்ந்து விபத்து : பலர் காயம்

கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று...

கல்கிசை குழு மோதலில் ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம்

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

போர் அவளிடம் அழுவதற்கான சக்தியைக் கூட பறித்துவிட்டது

காசாவின் ஷேக் ரத்வான் பகுதியில், 6 வயது மிஸ்க் எல்-மெதுன் அமைதியாகக்...

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு முடிவு

மியன்மாரில் 4 ஆண்டுகளாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு...