Date:

அஜித் நிவாட் கப்ரால் அமைச்சு, பராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளாரா?

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக கடமையாற்றியதற்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரியதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இந்த விடயம் குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதன் போது, ‘இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக கடமையாற்றியதற்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரியதாகவும், அந்த தொகை 19 இலட்சம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அர்ஜூன் அலோசியசுக்கும் அதனை வழங்க வேண்டியேற்படுமே? ‘ என்று வினவிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அதே போன்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகி, மீண்டும் மத்திய வங்கி ஆளுனராக பதவியேற்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளும் உறுதிப்படுத்தப்பட்டவையல்ல என்றும் அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்...

கொழும்பில் இடம்பெறவுள்ள ‘சுவர்க்கத்தை நோக்கிய பாதை’வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக விழிப்புணர்வு மாநாடு

புனித அல்குர்ஆனின் வழிகாட்டல்கள் மற்றும் அறிவியல் ரீதியான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு,...

Breaking சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11...

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத...