நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி பீன்ஸ், கேரட், எலுமிச்சை, பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
பொதுச் சந்தையில் போஞ்சி கிலோ 800 முதல் 850 ரூபாய் வரையிலும், கேரட் கிலோ 550 முதல் 600 ரூபாய் வரையிலும், கோவா கிலோ 540 ரூபாய் வரையிலும், தக்காளி ஒரு கிலோ 590 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இஞ்சி 1750 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 1100 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, மரக்கறிகளின் விலை அதிகரிப்பு எதிர்வரும் நத்தார் பண்டிகை காலம் வரை தொடரும் என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.