Date:

கணவனும் மனைவியும் வெட்டிப் படுகொலை..! – மாயமான நகை – விசாரணைகள் தீவிரம்

வவுனியா – செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று(30) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைசேர்ந்த 72 வயதுடைய பசுபதிவர்ண குலசிங்கமும், அவரது மனைவியான 68 வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபாரநிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்றையதினம்(29) இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த தம்பதிகள் வியாபார நிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வியாபாரநிலையத்தை திறப்பதற்காக வருகைதந்த மகன் தனது தாயும் தந்தையும் இரத்தவெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக்கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர்,

குறித்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்க நகை ஒன்றும் காணாமல்போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் இன்று அதிகாலை திருட்டில் ஈடுபடும் போது இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் செட்டிகுளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேருந்து கவிழ்ந்து விபத்து : பலர் காயம்

கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று...

கல்கிசை குழு மோதலில் ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம்

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

போர் அவளிடம் அழுவதற்கான சக்தியைக் கூட பறித்துவிட்டது

காசாவின் ஷேக் ரத்வான் பகுதியில், 6 வயது மிஸ்க் எல்-மெதுன் அமைதியாகக்...

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு முடிவு

மியன்மாரில் 4 ஆண்டுகளாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு...