வட கொழும்பு பிரதேச காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார். அதன்போது 7,500 நீதிமன்ற வளாகத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இலஞ்சம் / ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நீதிபதி கைது செய்யப்பட்டதாக லங்காதீப தெரிவித்துள்ளது.
மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக பிரிந்ததை உறுதிப்படுத்தும் விவாகரத்து ஆவணங்களை ஒருவருக்கு வழங்க அவரிடம் அந்த காதி நீதிபதி
7,500 ரூபா இலஞ்சம் கேட்டுள்ளார்.
தெமட்டகொடையில் அமைந்துள்ள கொழும்பு (வடக்கு) காதி நீதிமன்றத்தில் இலஞ்சம் பெறும் போதே நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்

