கொழும்பு – புறநகர் பகுதியான வத்தளை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து இன்று(29) காலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாத்தறை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சேனபர ஹெட்டியாராச்சி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த விடுதிக்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று இந்த கொலையை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அத்தோடு, கொலை செய்யப்பட்ட நபர் அந்த விடுதியின் ஊழியர் என தெரியவந்துள்ளது.