இலங்கை கிரிக்கட் நிறுவனத்துடன் சர்ச்சையில் சிக்கிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கியமை இலங்கை கிரிக்கெட் மீதான சர்வதேச கிரிக்கட் பேரவையின் தடையை நீக்குவதில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கிரிக்இன்போ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது மேலும் அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் இதுவரை எவ்வித உறுதிமொழியும் வழங்கவில்லை என கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.
ஆனால், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு கடுமையாக உழைத்த ரொஷான் ரணசிங்கவை நீக்கியிருப்பது, கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்கம் இனி தலையிடாது என்பதற்கான அறிகுறியாக அமையும் என கிரிக்இன்போ இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.