Date:

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – 5 ஆம் திகதி விசாரணை!

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்  ரொஷான் ரணசிங்கவினால் இடைக்கால குழுவை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் நீதிமன்ற திகதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 5 ஆம் திகதி குறித்த விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை முன்வைக்கமாறு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் அலி சப்ரி!

இன்று இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் பிரிவிற்கும் ஒரு கவலைக்குரிய நாளாகும்...

டெய்சி ஆச்சி வழக்கில் இருந்து விடுதலை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Breaking கைதான சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அக்குரேகொட படுகொலை ; இரண்டாவது துப்பாக்கிதாரி கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சியையும் அவரது மனைவியையும் சுட்டுக்...