எனினும் இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாணயத்தில் நுவரெலியா தபாலகம், காகம் மற்றும் வண்ணத்துப்பூச்சி போன்ற உருவப்படங்களை தாங்கியதாக இந்த 10 ஆயிரம் ரூபாய் நாணயத் தாள் போலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பத்தாயிரம் ரூபாய் நாணயத்தாள் ஒன்று வெளியிடப்பட்டிருந்தால் அது குறித்து பிரதான ஊடகங்களில் மத்திய வங்கி அறிவித்திருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள் ஒன்று வெளியிடப்படவில்லை என இணையத்தில் உலவும் போலித் தகவல்களை வெளிப்படுத்தும் srilanka.factcrescendo.com இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW