நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சிறு குழந்தைகளுக்கு கை, கால், வாய் நோய் பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார் .
இதன்படி, பெற்றோர்கள் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய நாட்களில் மேல் சுவாசக்குழாய் நோய்களான இருமல், சளி, காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், குழந்தைப் பருவத்தில் ஹெபடைடிஸ், வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் போன்றவை குழந்தைகளிடையே பரவி வருகின்றன.
மேலும், இருமல், சளி, காய்ச்சலுடன் உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.வாயைச் சுற்றி சிவப்பு புள்ளிகள் மற்றும் கைகளில் சிவப்பு புள்ளிகள் இருந்தால், அந்த குழந்தைகளுக்கு வாய் நோய் வரலாம்.
அந்த குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருங்கள்.சில நாட்களில் குணமாகும்.
டெங்குவில் கவனமாக இருங்கள்.டெங்கு உருவாகி உள்ளது.மழையால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.இதை குறைக்க குழந்தைகளுக்கு சுத்தமான தண்ணீர்,சுத்தமான உணவு வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.