சீரற்ற காலநிலையால் நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, பதுளை, கம்பஹா, மாத்தறை, கேகாலை இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் குருணாகல் ஆகிய 10 மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவுகின்றது என்று தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மலையகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது.