இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பாதிப்புகளுக்கு நன்கொடையாக எக்ஸ் வலைத்தளத்தின் வருமானம் வழங்கப்படும் என எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்
எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் (Subscribers) மூலம் கிடைக்கும் வருமானம் போரில் பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும் என எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கான பதில் தாக்குதலையும் இஸ்ரேல் தரப்பு முன்னெடுத்து வருகிறது.
இந்த போரில் இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், உலக பணக்காரர்களில் ஒருவரும் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் (Subscribers) மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.