நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 798 குடும்பங்களை சேர்ந்த 2930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது
தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது
ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 172 குடும்பங்களைச்சேர்ந்த 556 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
கேகாலையில் 26 குடும்பங்களை சேர்ந்த 92 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 30 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 62 குடும்பங்களை சேர்ந்த 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 44 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது
மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 21 குடும்பங்களை சேர்ந்த 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
50 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் 1 மரணம் நிகழ்ந்துள்ளது
மாத்தளை மாவட்டத்தில் 22 குடும்பங்களை சேர்ந்த 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 50 நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்
வட மாகாணம் யாழ் மாவட்டத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது
வடமேல் மாகாணம் குருனாகல் மாவட்டத்தில் 708 குடும்பங்களை சேர்ந்த 2591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 116 வீடுகள் பகுதியளவிலும் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது 639 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன