Date:

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 55,000 டொலர் பணம் எங்கே?

இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் நன்கொடையாக வழங்கிய 55,000 டொலர் தொகை இன்னும் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா 50,000 டொலர்களையும், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் 5,000 டொலர்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பல்லேகல மற்றும் ஆர்.பிரேமதாச மைதானங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவே இந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

குறித்த பணம் எங்கே போனது எனத் தெரியவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், விளையாட்டுத்துறை அமைச்சர் தலையிடுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன...

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...