அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான Fifa உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில்பாலஸ்தீன் அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.
Fifa கால்பந்து உலகக்கோப்பை தொடர் 2026ஆம் ஆண்டு நடக்கவுள்ளது. இதில் ஆசிய / அவுஸ்திரேலிய மண்டல அணிகளுக்கான தகுதிச்சுற்றின் 2ஆம் கட்ட போட்டிகளில் மொத்தமாக 36 அணிகள் பங்கேற்றுள்ளன.
அவுஸ்திரேலிய – பாலஸ்தீன் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி குவைத்தில் நடைபெற்றது.
இஸ்ரேல்-காசா மோதல் தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனத்தின் இரண்டாவது போட்டி இதுவாகும் .
ஆஸ்திரேலியாவின் வீரர்கள் தங்கள் போட்டிக் கட்டணத்தில் இருந்து பாரிய தொகையிலான நன்கொடையை காசாவில் மனிதாபிமான முயற்சிகளுக்கு வழங்குகிறார்கள்.
பாலஸ்தீன நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரர்கள் இப்ராஹிம் அபுமியர், அஹ்மத் குல்லாப் மற்றும் கலீத் அல்-நப்ரிஸ் ஆகியோர் காசாவில் சிக்கிக் கொண்டதால் அவர்கள் இல்லாமல் தான் பாலஸ்தீன் அணி விளையாடியது.
இந்த போட்டியில் 14,537 ரசிகர்கள் கலந்து கொண்டனர், பாலஸ்தீனத்தை ஆதரிப்பவர்கள் அனைவரும் கொடிகளை அசைத்தும், “FREE GAZA ” என்று கொடிகளை ஏந்தியவாறும் இருந்தனர்.
பாலஸ்தீனம் கடைசியாக 2019 இல் சவுதி அரேபியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடியது.
உலகத் தரவரிசையில் 96வது இடத்தில் உள்ள அவர்கள் தற்போது உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் மூன்றாவது இடத்தில் உள்ளனர், அதே நேரத்தில் ஆஸ்திரேலியா தொடர்ந்து வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.