காஸாவில் நான்கு நாள் போர்நிறுத்தம், என்கிளேவில் சிறைபிடிக்கப்பட்ட 50 பேரை விடுவிப்பதற்கான கத்தார் மத்தியஸ்தர ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்காலிக போர் நிறுத்தம் எட்டப்பட்டதை ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 150 பலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
நெதன்யாகு கூறுகையில், ஒப்பந்தம் என்பது போர் நிறுத்தப்படும் என்று அர்த்தமல்ல. மாறாக தாக்குதல் இடைநிறுத்தப்பட்ட பிறகும் இஸ்ரேலிய இராணுவத்தின் அழுத்தம் காணப்படும்.