Date:

Team of the Tournament இல் இலங்கை அணி வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் அணியில் (Team of the Tournament) இடம்பிடித்துள்ளார்.

அவர் தனது முதல் உலகக் கிண்ண போட்டித் தொடரில் இம்முறை பங்குபற்றினார். இதில் டில்ஷான் மதுஷங்க 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் அணியில் அவுஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அணியில் 6 இந்திய வீரர்கள், 2 அவுஸ்திரேலிய வீரர்கள், 2 தென்னாப்பிரிக்க வீரர்கள், இலங்கை மற்றும் நியூசிலாந்தில் இருந்து தலா ஒரு வீரர் உள்ளனர்.

ஆனால் இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடிய அவுஸ்திரேலிய அணியை உலகக் கிண்ணத்துக்கு அழைத்துச் சென்ற டிராவிஸ் ஹெட் அந்த அணியில் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐசிசி யால் Team of the Tournament அணிக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் விபரம் இதோ,

Rohit Sharma (இந்தியா) (தலைவர்)
Virat Kohli (இந்தியா)
KL Rahul (இந்தியா)
Mohammed Shami (இந்தியா)
Ravindra Jadeja (இந்தியா)
Jasprit Bumrah (இந்தியா)
Adam Zampa (அவுஸ்திரேலியா)
Glenn Maxwell (அவுஸ்திரேலியா)
Quinton de Kock (தென் ஆப்பிரிக்கா) (விக்கெட் காப்பாளர்)
Gerald Coetzee (தென் ஆப்பிரிக்கா)
Daryl Mitchell (நியூசிலாந்து)
Dilshan Madushanka (இலங்கை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373