இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் உலகக்கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள், நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 241 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸி. அணி 43 ஓவர்களில 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, வெற்றி இலக்கை அடைந்து, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
ஆஸி. அணி வீரரான Travis Head 137 ஓட்டங்களைப் பெற்று அசத்தினார்.
1987 1999
2003
2007
2015