இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க பத்து பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிபுணர் குழு சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் காற்று மாசுபாட்டில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் வாகனங்களை இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த நிபுணர் குழு இதற்கு முன்னர் நான்கு தடவைகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. வாகன இறக்குமதி தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இந்த அறிக்கை அடுத்த மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW