பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை குறைவடையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், முட்டையின் விலையும் குறையக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலையில் அது தாக்கம் செலுத்தி தீவனத்தின் விலை அதிகரிக்குமாயின் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறைவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாமல் போகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW