கொழும்பின் பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலையின் போக்குவரத்து நெருக்கடியினை தீர்க்க பாடசாலை சமூகம் போலிசாரின் உதவியை நாடியது .
பாடசாலை பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் பெற்றோர்கள் மாணவர்களை இறக்குவதற்கும் ஏற்றுவதற்கும் பொலிஸாரினால் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது . அந்த இடத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பாரிய பேருந்துகள் நிறுத்தப்படுவதாக பெற்றோர்களும் பாடசாலை சமூகமும் விசனம் தெரிவித்துள்ளனர் .
இந்த பேருந்துகள் மனோ கணேசனின் அமைப்பாளர் பால சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது .
கடந்த பாடசாலை அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டத்தில் இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்யும் படி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தபோது மனோவின் அமைப்பாளர் பாலசுரேஷ் அதனை எதிர்த்து அடாவடித்தனம் செய்திருந்தார் . ஆனாலும் பெற்றோர்கள் அவற்றை நிவர்த்தி செய்யும் விதமாக கையெழுத்து வேட்டை ஒன்றினை சேகரித்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்திருந்தார்கள் .
அண்மையில் பாடசாலை நிர்வாகம் no parking மற்றும் Drop and Pick up சட்டத்தை அமுல்படுத்துமாறு போலிசாரிடம் கோரிக்கை விடுத்ததனை அடுத்து போலீசார் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர் .
இந்த பிரச்சனையை தீர்க்கும் முகமாக பம்பலப்பிட்டி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை சேவை வாகன உரிமையாளர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருடன் ஒரு கூட்டம் கடந்த செவ்வாய் கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது . இந்த கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக மனோ கலந்து கொண்டு . பாடசாலை நிர்வாகம் , பெற்றோர் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு எதிராக தனது அமைப்பாளர் பாலசுரேசுக்கு ஆதரவான முடிவுகளை எடுக்க நிர்பந்திக்கும் கருத்துக்களை தெரிவித்தபோது அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பாடசாலை சமூகத்தை சேர்ந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னால் தாக்குதல் நடத்தவும் முனைந்தார் . அதனையடுத்து பாடசாலை உள்விவகாரங்களில் அழையாவிருந்தாளியாக கலந்து கொண்ட மனோவிற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து உடனடியாக பாடசாலையை விட்டு கிளம்பினார் .
பாடசாலை நேரத்தில் மேற்படி பாலசுரேஸ் அவர்களின் பேருந்து ஊழியர்கள் பாடசாலை பெற்றோர்களிடம் அடாவடியாக தவறான வார்த்தைகளால் திட்டுவதுடன் , சீட்டாடுவது , சிகரட் புகைப்பது போன்றவற்றினால் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க செயற்பாடுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
மேற்படி செயற்பாடானது தானும் தான் சார்ந்தவர்களும் எவ்வாறான செயற்பாடுகளையும் செய்வதற்கு உரித்துடையவர்களாகவும் அப்பாவி பெற்றோரும் மாணவர்களும் எக்கேடாவது கெட்டுப்போகட்டும் எனும் நோக்கில் சர்வாதிகராமாக ஒரு பக்கத்தில் பேருந்துகளை நிறுத்துவதற்கு பொலிசாரை நிர்பந்தித்தோடு மட்டுமல்லாமல் பாடசாலை சமூகத்திற்கும் சிறிய பாடசாலை சேவை வாகன உரிமையாளர்களுக்கும் மிரட்டல் விடுக்கும் நடவடிக்கையாகவும் பார்க்க வேண்டிய ஒன்றாக அமைந்துவிட்டது.
ஒரு பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு பொறுப்பற்று ஒருபக்கச்சார்பாக செயற்படுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது.
இவரைப்போன்ற அராஜக பேர்வழிக்கு வாக்களித்து எவ்வித பயனும் இல்லாது செல்ல வேறிடம் இல்லாது நிர்கதியாயிருக்கும் கொழும்பு வாழ் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்.