கட்டுநாயக்க விமான நிலையத்தில் புறப்படும் போது நிலவும் பயணிகளின் போக்குவரத்திற்கு தீர்வாக 8 சுய சேவை டிக்கெட் சரிபார்ப்பு இயந்திரங்கள் (Self Check-in) மற்றும் சுய சேவை பேக்கேஜ் டெலிவரி இயந்திரம் (Bag Drop) என்பன நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுய சேவை டிக்கெட் சோதனை இயந்திரங்கள் மூலம் விமான பயணிகளுக்கான இருக்கை தேர்வு (Seat Selection),
அவர்களின் போர்டிங் பாஸ் அச்சிடுதல் (Boarding Pass Printing) மற்றும் பேக் டேக் பிரிண்டிங் ( Bag Tag Printing ) ஆகிய மூன்று பணிகளை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தானியங்கி இயந்திர அமைப்பின் ஊடாக விமானப் பயணிகள் தமது விமான நிலைய கடமைகளை முடித்து 5 நிமிடங்களில் விமானத்திற்குள் பிரவேசிக்க கூடியதாய் இருக்குமென கூறப்படுகிறது.