Date:

கிரிக்கெட் வழக்கில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் விலகினார்

கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று (14) விலகியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்  தலைவர் இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமது கட்சிக்காரர் ஆட்சேபனை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர், சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நியாயமற்ற முறையில் விமர்சித்ததன் காரணமாகவே இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.

இதற்கமைய இந்த மனு தொடர்பான விசாரணையை வேறு நீதிபதிகள் குழாமிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...